ADDED : செப் 17, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய்கள் தொல்லையால் திருப்புலிவனத்தினர் அவதி
உத்திரமேரூர் அடுத்த, திருப்புலிவனம் கிராமத்தில், 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராம பேருந்து நிறுத்தம் வழியாக, மருதம், ஆண்டித்தாங்கல், மலையன்குளம், வடதாவூர், படூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். திருப்புலிவனம் தெருக்கள் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்போர்களை நாய்கள் துரத்தி கடிக்கின்றன. இதில், சில வெறி நாய்களும் உள்ளன. இதை சம்பந்தப்பட்ட துறையினர் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டி.அறிவழகன், திருப்புலிவனம்.