/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேர்தல் பணியில் காவலர்கள் 'பிசி' தலை விரித்தாடும் இளைஞர்கள்
/
தேர்தல் பணியில் காவலர்கள் 'பிசி' தலை விரித்தாடும் இளைஞர்கள்
தேர்தல் பணியில் காவலர்கள் 'பிசி' தலை விரித்தாடும் இளைஞர்கள்
தேர்தல் பணியில் காவலர்கள் 'பிசி' தலை விரித்தாடும் இளைஞர்கள்
ADDED : மார் 28, 2024 01:10 AM
காஞ்சிபுரம்:தமிழகம் முழுதும், ஏப்., 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணிக்கு, சிறப்பு சோதனைச்சாவடி மற்றும் பறக்கும் படை உள்ளிட்ட பலவித பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கமான ரோந்து பணிகளில், காவலர்கள் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கிராமங்களில் சட்ட விரோதமான மது விற்பனை மற்றும் பிற தீய செயல்களில், இளைஞர்கள் ஈடுபட துவங்கி உள்ளனர்.
குறிப்பாக, முத்தியால்பேட்டை கிராமத்தில், சட்ட விரோதமான மது பாட்டில் விற்பனை செய்வது, பள்ளூர்-சோகண்டி சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்டவைகளில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை, தடுக்க வேண்டிய காவல் துறையினர். இரவு நேரங்களில் ஒரு முறையாவது ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.