/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விருதசீர நதி குறுக்கே உயர்மட்ட தரைப்பாலப் பணிகள் துவக்கம்
/
விருதசீர நதி குறுக்கே உயர்மட்ட தரைப்பாலப் பணிகள் துவக்கம்
விருதசீர நதி குறுக்கே உயர்மட்ட தரைப்பாலப் பணிகள் துவக்கம்
விருதசீர நதி குறுக்கே உயர்மட்ட தரைப்பாலப் பணிகள் துவக்கம்
ADDED : ஏப் 20, 2024 11:32 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, பள்ளூர் கிராமத்தில் இருந்து, புள்ளலுார் கிராமம் இடையே, விருதசீர நதி கடக்கிறது.
இங்கு, வடகிழக்கு பருவ மழை மற்றும் பாலாற்றில் வெள்ளம் நீர் செல்லும் போது முழங்கால் அளவிற்கு, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.
இதுபோன்ற நேரங்களில், தரைப்பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, கணபதிபுரம் வழியாக புள்ளலுார், தண்டலம், புரிசை ஆகிய கிராமத்தினர் செல்ல வேண்டி உள்ளது.
இந்த சாலையில், உயர்மட்ட தரைப்பாலம் அமைக்க வேண்டும் என, கிராமத்தினர் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை ஏற்று, காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, 1.50 கோடி ரூபாய் செலவில், 24 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்திற்கு உயர் மட்ட தரைப்பாலம் கட்டும் பணியை துவக்கி உள்ளனர்.
இந்த கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றால், மழைக்காலத்திலும் உயர்மட்ட தரைப்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல முடியும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

