/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில் திருமண மண்டபம் கட்டுமான பணி 'விறுவிறு'
/
கோவில் திருமண மண்டபம் கட்டுமான பணி 'விறுவிறு'
ADDED : மே 07, 2024 11:33 PM

குன்றத்துார்:குன்றத்துார் மலை மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. தமிழகத்தில், வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரே முருகன் கோவில் இக்கோவில் மட்டுமே.
இங்கு, முகூர்த்த நாட்களில் 40க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கின்றன. இவற்றுக்கு வரும் வாகனங்கள் மற்றும் உறவினர்களால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
இதையடுத்து, இக்கோவிலின் பின்புறம் மலை அடிவாரத்தில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பில் ஆறு திருமண மண்டபங்கள் கட்டும் பணிகள், ஓராண்டாக நடந்து வருகின்றன. இதன் கட்டுமான பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டன. எஞ்சியுள்ள பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவடையும்.
இங்கு, நல்ல இடவசதி உள்ளது. மண்டபம் திறக்கப்பட்ட பின், முகூர்த்த நாட்களில் மலை சாலையில் ஏற்படும் கூட்ட நெரிசல் குறையும் என, கோவில் நிர்வாக குழுவினர் தெரிவித்தனர்.

