/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் பிரச்னைக்குரிய டாஸ்மாக் கடை மூடல்
/
காஞ்சியில் பிரச்னைக்குரிய டாஸ்மாக் கடை மூடல்
ADDED : மார் 04, 2025 01:09 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவும், சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு காரணமாக பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் இருந்தன.
குறிப்பாக, மேட்டுத் தெரு, நெல்லுக்காரத் தெரு, ராஜாஜி மார்க்கெட், சந்தைவெளி அம்மன் கோவில் அருகிலும் இருந்த டாஸ்மாக் கடைகளால் நகரவாசிகளுக்கு பெரும் தொந்தரவு இருந்தது. இந்த கடைகள் கடந்த ஆண்டுகளில் அடுத்தடுத்து மூடப்பட்டன.
ஆனால், செங்கழு நீரோடை வீதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை மூடப்படாமல் பிரச்னைக்குரிய கடையாகவே செயல்பட்டு வந்தது. நெரிசல் மிகுந்த பகுதியில், அடிக்கடி மதுபிரியர்களிடையே தகராறு ஏற்படும் இடமாகவும் அப்பகுதி காணப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், இந்த டாஸ்மாக் கடை இருக்கும் இடம் அருகே செல்லவே தயங்கினர்.
இந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய, மாதந்தோறும் நடைபெறும் சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் இந்த பிரச்னை தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், செங்கழுநீரோடை வீதி டாஸ்மாக் கடையை மூடி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். இக்கடை, நகர்ப்புறத்திற்கு வெளியே இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பின், செங்கழுநீரோடை வீதியில், நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.