/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் அரசு கல்லுாரியில் வரும் 30ல் கலந்தாய்வு துவக்கம்
/
உத்திரமேரூர் அரசு கல்லுாரியில் வரும் 30ல் கலந்தாய்வு துவக்கம்
உத்திரமேரூர் அரசு கல்லுாரியில் வரும் 30ல் கலந்தாய்வு துவக்கம்
உத்திரமேரூர் அரசு கல்லுாரியில் வரும் 30ல் கலந்தாய்வு துவக்கம்
ADDED : மே 28, 2024 03:52 AM
காஞ்சிபுரம், : உத்திரமேரூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வரும் 30ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்குகிறது.
இதுகுறித்து, உத்திரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் முனைவர் சுகுமாரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024- - 25ம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு இளநிலை பாடப்பிரிவுக்கான மாணவ- - மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 30ம் தேதி துவங்குகிறது.
அதன்படி, வரும் 30ம் தேதி, காலை 9:30 மணிக்கு, மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு, முன்னாள் படை வீரர், என்.சி.சி., உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
ஜூன் 12ம் தேதி, காலை 9:30 மணிக்கு பி.எஸ்சி., இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், கணிதவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஜூன் 13ம் தேதி, பி.காம்., வணிகவியல், பி.ஏ., பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வும், ஜூன் 14ம் தேதி, பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுக்கான முதற்கட்ட கலந்தாய்வும், காலை 9:30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், பி.ஏ., தமிழ் லிட்., பி.ஏ. ஆங்கிலம் லிட்., பி.ஏ., பொருளாதாரம், பி.காம்., பொது ஆகிய பாடப்பிரிவுகளுக்கு சேர்க்கை கட்டணம் 2,491 ரூபாய்; பி.எஸ்சி., கணிதம், பி.எஸ்சி., உயிரியல், பி.எஸ்சி., வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கட்டணம் 2,511 ரூபாய்; பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுக்கு கல்வி கட்டணம் 1,611 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தரவரிசை அடிப்படையில் தகுதிவாய்ந்த மாணவ-- - மாணவியருக்கு கல்லுாரியின் வாயிலாக குறுந்தகவல், மின்னஞ்சல் மற்றும் மொபைல் போன் வாயிலாக தெரியப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் சேர்க்கை கட்டணத்தை தவறாமல் கொண்டு வர வேண்டும். மாணவர் சேர்க்கை விபரங்களுக்கு கல்லுாரியின் www.gascuthiramerur.ac.in என்ற இணையதள முகவரியை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.