தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கால்நடை தொட்டியில் விரிசல் குடிநீரை தேக்கி வைப்பதில் சிக்கல்

கால்நடை தொட்டியில் விரிசல் குடிநீரை தேக்கி வைப்பதில் சிக்கல்

கால்நடை தொட்டியில் விரிசல் குடிநீரை தேக்கி வைப்பதில் சிக்கல்


ADDED : ஜூலை 28, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 04:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: களக்காட்டூரில் கால்நடைகளின் தாகம் தீர்ப்பதற்காக கட்டப்பட்டுள்ள தொட்டியில் ஏற்பட்ட விரிசலால், குடிநீரை தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் ஊராட்சியில், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில் கடந்த 2018 – 19ல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 20,000 ரூபாய் செலவில், குழாய் வசதியுடன் கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

மேய்ச்சலுக்கு சென்று வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் தொட்டியில் தேக்கி வைக்கப்படும் குடிநீரை பருகி வந்தன. இந்நிலையில், கால்நடை தொட்டியில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், தொட்டியில் குடிநீரை தேக்கி வைக்க முடியாத சூழல் உள்ளது. இதனால், கால்நடை தொட்டி பயன்பாடின்றி வீணாகி வருகிறது.

எனவே, கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், குடிநீர் தொட்டியில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க களக்காட்டூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us