/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குறு, சிறு நிறுவனங்களுக்கு ஆக.19 முதல் கடன் மேளா
/
குறு, சிறு நிறுவனங்களுக்கு ஆக.19 முதல் கடன் மேளா
ADDED : ஆக 14, 2024 09:42 PM
காஞ்சிபுரம்:தமிழக தொழில் முதலீட்டு கழகம், மாநில அரசின் ஆதரவுடன் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கும் பிரிவுகளை விரிவுபடுத்தவும், உற்பத்தியை பன்முகப்படுத்தவும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ், தமிழக தொழில் முதலீட்டு கழகம் கடனுதவி வழங்கி வருகிறது.
மறைமலை நகர் கிளை அலுவலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா, ஆக.19 முதல், செப்.6 வரை நடைபெறுகிறது.
இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் தகுதி பெரும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம், 1.5 கோடி வரை வழங்கப்படும்.
இந்த வாய்ப்பை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் பங்கேற்று, மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
மேலும், விபரங்களுக்கு, 94450 23488, 78455 29657, 96001 30247, 94450 23494 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.