/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உதவி இயக்குனருக்கு உணவகத்தில் வெட்டு
/
உதவி இயக்குனருக்கு உணவகத்தில் வெட்டு
ADDED : மே 15, 2024 11:46 PM
சென்னை:துரித உணவகத்தில் உணவு அருந்திய, சினிமா உதவி இயக்குனரை வெட்டியவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
அசோக் நகர்-, 96வது தெருவைச் சேர்ந்தவர் தர்ஷன், 28; சினிமா உதவி இயக்குனர்.
நேற்று முன்தினம் இரவு, கே.கே.நகர், ராஜமன்னார் சாலையில் உள்ள துரித உணவகத்தில் உணவு அருந்தியுள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், தர்ஷனிடம் வீண் தகராறு செய்துள்ளனர். திடீரென, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால், தர்ஷனை வெட்டிவிட்டு தப்பினர்.
தர்ஷனுக்கு தலையில் வெட்டு விழுந்த நிலையில், அங்கிருந்தோர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின்படி, கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, துரித உணவகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.