/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பணை நடுவே சேதம் தண்ணீர் தேக்குவதில் சிக்கல்
/
தடுப்பணை நடுவே சேதம் தண்ணீர் தேக்குவதில் சிக்கல்
ADDED : செப் 16, 2024 04:49 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த இலுப்பப்பட்டு கிராம ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையின் போது, கூத்திரம் பாக்கம் ஏரி உபரி நீர்வெளியேறி, இலுப்பப்பட்டு ஏரி நீர்வரத்துகால்வாய் வழியாக சென்று, இலுப்பப்பட்டு ஏரி நிரம்பும்.
இந்த கால்வாய் குறுக்கே, ஆங்காங்கே தண்ணீர் சேகரிக்கும் கட்டமைப்பிற்கு, தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
இதில், 4.13 லட்சம் ரூபாய் செலவில், 2020ம் ஆண்டு கட்டப்பட்ட தடுப்பணை நடுவே, சிமென்ட் கான்கிரீட் உடைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, மழைக்காலத்தில் தடுப்பணையில் தண்ணீர்தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, நீர்வரத்து கால்வாய் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை, சம்மந்தப்பட்ட துறையினர் முறையாக ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.