/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுபாலத்தில் சேதம் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு
/
சிறுபாலத்தில் சேதம் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு
ADDED : ஜூலை 30, 2024 07:04 AM

காந்துார்: மதுரமங்கலம் அடுத்த காந்துார் ஊராட்சியில், மேட்டுகாந்துார் கிராமம் உள்ளது. இங்கு, கடந்த 2022 - -23ம் நிதி ஆண்டில், மழை நீர் போக்கு கால்வாய் குறுக்கே, சிறு பாலம் கட்டி உள்ளனர்.
இந்த பாலம் தரமில்லாததால், மேல் பகுதி சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், தரைப்பாலத்தின் உள்ளே இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த பள்ளத்தை மறைக்க, தென்னை மரம் துண்டு கழிவு போட்டு தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
இதனால், அந்த சாலை வழியாக கடந்து செல்லும் வாகனங்கள், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே, சேதம் ஏற்பட்டிருக்கும் தரைப்பாலத்தை, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி நிர்வாகம் ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.