ADDED : ஜூன் 29, 2024 11:17 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட எச்சூர் ஊராட்சியில் 1,000த்துக்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கிருந்து, ஒரகடம், வல்லம் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு, எச்சூர் - பண்ருட்டி சாலை வழியே தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சாலையின் குறுக்கே, பூதனுார் ஏரியில்இருந்து வெளியேறும்உபரிநீர் செல்லும் கால்வாயில் தரைப்பாலம் உள்ளது. இந்த நிலையில், இந்த தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்து, சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், தரைப்பாலத்தில் இரண்டு பக்கங்களிலும் தடுப்பு இல்லை. இதனால், இரவு நேரங்களில் வரும் வாகனஓட்டிகள் சாலையோரபள்ளத்தில் விழுந்துவிபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, எச்சூர் சாலையில் உள்ள சேதமடைந்து உள்ள தரைப்பாலத்தை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.