/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காவனுார் சாலை வளையில் சேதமடைந்த இரும்பு தடுப்பு
/
காவனுார் சாலை வளையில் சேதமடைந்த இரும்பு தடுப்பு
ADDED : ஜூன் 26, 2024 11:41 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஒரத்துார் - காவனுார் பிரதான சாலை வழியே, மாடம்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், காவனுார் அருகே, சாலையில் அபாயகரமான வளைவு உள்ளது. இந்த வளைவில் ஏற்படும் விபத்தை தவிர்க்கும் வகையில் தடுப்பு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன், இவ்வழியாக வந்த கார், தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தடுப்பு சேதமடைந்து உடைந்துள்ளது.
இதனால், தடுப்பு இல்லாத வளைவில், இவ்வழியாக வேகமாக வரும் வாகன ஓட்டிகள், எதிர்பாராத விதமாக சாலையோர கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, கால்வாய் பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, காவனுார் சாலையில், உள்ள அபாயகரமான வளைவில் புதிய தடுப்பு அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.