ADDED : ஜூலை 16, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், போந்துார் ஊராட்சிக்குட்பட்ட, ஆரநேரி கிராமம், பூவரசன் பூ தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த நிலையில், இங்கு குடியிருப்புகளின் மத்தியில் உள்ள மின்கம்பம், அடி முதல், மேல் பகுதி வரை முழுதும் சேதமடைந்து, சிமென்ட் காரை உதிர்ந்து உள்ளது.
எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ள மின்கம்பத்தால், அப்பகுதியில் குடியிருப்போர் அச்சத்தில் உள்ளனர்.
மின்கம்பம் விழுந்து உயிர்பலி ஏற்படும் முன், மின்வாரிய அதிகாரிகள், மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.