/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலகம்
/
சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலகம்
ADDED : மார் 04, 2025 01:45 AM

உத்திரமேரூர், உத்திரமேரூர் தாலுகா, புல்லம்பாக்கம் ஊராட்சியில், கிராம நிர்வாகஅலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்திற்கு பட்டா, சிட்டா, அடங்கல், முதியோர் உதவித்தொகை, ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவைகள் பெற, தினமும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இக்கட்டடம், 25 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டதால், கட்டடம் சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து உதிர்ந்துகம்பிகள் வெளியேதெரிகின்றன.
மேலும், மழைக்காலத்தில் சுவர்களில் தண்ணீர் கசிந்து ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. இதனால், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கட்டடம் எப்போது இடிந்து விழுமோ, என்ற அச்சத்தோடு வந்துசெல்கின்றனர்.
எனவே, சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை அகற்ற, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

