/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோர கற்களால் வேடலில் விபத்து அபாயம்
/
சாலையோர கற்களால் வேடலில் விபத்து அபாயம்
ADDED : செப் 09, 2024 11:29 PM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, வேடல் கிராமத்தில் இருந்து, கூத்திரம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக, கூத்திரம்பாக்கம், தொடூர், நீர்வள்ளூர் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இருசக்கர வாகனம் மற்றும் நான்குசக்கர வாகனங்களில், காஞ்சிபுரம் பகுதிக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலை, மூன்று மாதங்களுக்கு முன், புதிய தார் சாலையாக செப்பணிடப்பட்டது. சாலையின் இருபுறமும் மண்ணை அணைக்க வேண்டும்.
மண்ணுக்கு பதிலாக, கற்கள் கலந்த மண்ணை கொட்டி உள்ளனர். சாலையோரம் மண் கரைந்து, கற்கள் மட்டுமே பல் இளித்துக் கொண்டு காணப்படுகிறது.
இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலை வளைவில் திரும்பும் போது, கற்கள் மீது விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளன.
எனவே, வேடல்- - கூத்திரம்பாக்கம் செல்லும் சாலை ஓரத்தில் கொட்டி இருக்கும் கற்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.