ADDED : ஏப் 22, 2024 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டிவாக்கம், : மதுரமங்கலம் அடுத்த, துளசாபுரம் ஊராட்சியில், கண்டிவாக்கம் கிராமம் உள்ளது.
பிச்சிவாக்கம்- புரிசை செல்லும் சாலையில் இருந்து, கண்டிவாக்கம் - குப்பம் கிராமம் வரையில், தார் சாலை போடுவதற்கு ஜல்லி பரப்பியுள்ளனர். ஒரு மாதமாகியும் தார் சாலை போடும் பணி நிறைவு பெறவில்லை.
இதனால், அந்த சாலை வழியாக செல்லும், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
எனவே, கண்டிவாக்கம் தார் சாலை போடும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

