/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குன்றத்துார் முருகன் கோவில் சாலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றம்

ADDED : ஆக 28, 2024 11:07 PM

குன்றத்துார்:குன்றத்துார் மலை குன்று மீது, சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
குன்றத்துார் பேருந்து நிலையத்தில் இருந்து, இக்கோவிலுக்கு செல்லும் சாலையின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து, வீடுகள், வணிக கடைகளின் முன்புற பகுதி அமைக்கப்பட்டிருந்தது.
இதனால், இந்த சாலை குறுகலாகி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.
இதையடுத்து வருவாய் துறையினர் ஆக்கிமிப்பாளருக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் சரவணகண்ணன், ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் கனிமொழி ஆகியோர் குன்றத்துார் போலீசார் பாதுகாப்புடன் சென்று ஜே.சி.பி.,இயந்திரம் மூலம் ஆக்கிரமி கடைகள், வீடுகளை இடித்து அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
முதல் கட்டமாக 20 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டன. குன்றத்துாரில் சாலை ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.