ADDED : ஜூலை 21, 2024 06:27 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சிக்கு, தி.மு.க.,வைச் சேர்ந்த மகாலட்சுமி மேயராக உள்ளார்.
மாநகராட்சி நிர்வாகத்தில், மகாலட்சுமியின் கணவரின் தலையீடு அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
இவர் மீது, சொந்த கட்சி கவுன்சிலர்கள் சிலர் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
மகாலட்சுமி மேயர் பதவியை தக்கவைத்துக் கொள்ளவும், ஆதரவு கவுன்சிலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், திரை மறைவில் பேரம் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தி.மு.க.,வினரின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதில், முறைகேடுகள் நடந்துள்ளன.
இதை கண்டித்து, நேற்று காலை, காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே, காஞ்சிபுரம்மாவட்ட பா.ஜ., தலைவர் பாபு தலைமையில், ஆர்ப்பாட்டம்நடந்தது.