/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் கட்டண உயர்வை திரும்ப பெற ஆர்ப்பாட்டம்
/
மின் கட்டண உயர்வை திரும்ப பெற ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 30, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறுதல், மாதம் ஒரு முறை மின்கட்டண கணக்கீடு செய்தல், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு உள்ளிட்ட அம்சங்களை முன்வைத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், காஞ்சிபுரத்தில் நேற்று மாலை நடந்தது.
இதில், கட்சி நிர்வாகிகள் தினேஷ், மாவட்ட செயலர், கமலநாதன், கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். பெரியார் நினைவு துாண் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.