/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டெங்கு அறிகுறி இருந்தால் மருத்துவ சிகிச்சை பெறலாம்
/
டெங்கு அறிகுறி இருந்தால் மருத்துவ சிகிச்சை பெறலாம்
டெங்கு அறிகுறி இருந்தால் மருத்துவ சிகிச்சை பெறலாம்
டெங்கு அறிகுறி இருந்தால் மருத்துவ சிகிச்சை பெறலாம்
ADDED : மே 16, 2024 12:15 AM
காஞ்சிபுரம்:ஆண்டுதோறும், மே- 16ல் தேசிய டெங்கு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பருவ மழை காலங்களில், டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது.
திடக் கழிவு மேலான்மை மற்றும் பாதுகாப்பற்ற முறையில், தண்ணீர் சேமிக்கும் பழக்கமே, இதற்கு காரணமாக அமைகிறது.
ஊரகம், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி ஆகிய நிர்வாகங்களில் பணி அமர்த்திய டெங்கு நோய் தடுப்பு பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு, தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு, 104 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு, 49 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பகலில், 'ஏ.டி.எஸ்.,' கொசு கடித்து காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல் வலி, வாந்தி, எலும்பு வலி, ரத்த அணுக்கள் குறைபாடு ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட மருத்துவ சிகிச்சை பெறலாம்.
மேலும், மலேரியா, எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், ஸ்கரப்டைபஸ், டைபாய்டு காய்ச்சல் ஆகியவைக்கு உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
ஏ.டி.எஸ்., கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க, டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.