/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில் மாடவீதியில் கழிவுநீர் காஞ்சியில் பக்தர்கள் முகம் சுளிப்பு
/
கோவில் மாடவீதியில் கழிவுநீர் காஞ்சியில் பக்தர்கள் முகம் சுளிப்பு
கோவில் மாடவீதியில் கழிவுநீர் காஞ்சியில் பக்தர்கள் முகம் சுளிப்பு
கோவில் மாடவீதியில் கழிவுநீர் காஞ்சியில் பக்தர்கள் முகம் சுளிப்பு
ADDED : மே 27, 2024 07:26 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோவில், உலகளந்த பெருமாள், ஆதி காமாட்சியம்மன், சங்குபாணி விநாயகர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் உலகளந்தார் மாடவீதி வழியாக சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், பக்தர்கள் நடமாட்டமும் அதிகம் உள்ள இந்த சாலையில், பாதாள சாக்கடையில், அடிக்கடி அடைப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டமான நேற்றும், இத்தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில், துர்நாற்றத்துடன் கழிவுநீர் வழிந்தோடியது.
இதனால், இப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மட்டுமின்றி, தேரோட்டத்தை காண சென்ற பக்தர்களும் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டதால், முகம் சுளித்தபடியே சென்றனர்.
எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்கி, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.