/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பச்சையம்மன் கோவிலில் தீமிதி விழா
/
பச்சையம்மன் கோவிலில் தீமிதி விழா
ADDED : ஜூலை 28, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்,:வாலாஜாபாத் மன்னார்சாமி பச்சையம்மன் கோவிலில், 37ம் ஆண்டுக்கான ஆடி மாத உற்சவம், கடந்த 19ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் இரவு நேரங்களில் கரகாட்டம், குயிலாட்டம், ஒயிலாட்டம், சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
எட்டாவது நாளான நேற்று முன்தினம் மாலை, அப்பகுதி பாலாற்றங்கரையில் சக்தி கரகம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, விரதம் இருந்த 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஊர்வலமாக வந்து கோவில் வளாகத்தில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.