/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'தினமலர்' செய்தி எதிரொலி உதயமாங்குளத்தில் கால்வாய் கட்டுமானப் பணி துவக்கம்

ADDED : மார் 06, 2025 12:55 AM

உதயமாங்குளம்,:சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர் முதல், செவிலிமேடு மும்முனை சாலை சந்திப்பு வரையுள்ள புறவழி சாலையான, ஓரிக்கை மிலிட்டரி சாலை, 7 கி.மீ., நீளமும், 5.5 மீட்டர் அகலமும் கொண்டது.
கனரக வாகன போக்குரவத்து அதிகம் உள்ள இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை -- கன்னியாகுமாரி தொழிற்தட திட்டத்தின் கீழ், 11 மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில், உதயமாங்குளம் பிரதான சாலை குறுக்கிடும் இடத்தில், 100 மீட்டருக்கு மேல் வடிகால்வாய் கட்டுமானப் பணி விடுபட்டு இருந்தது. இதனால், மழைநீர் கால்வாய் வாயிலாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, உதயமாங்குளம் பிரதான சாலையோரம் விடுபட்ட இடத்தில் மழைநீர் வடிகால்வாய் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், உதயமாங்குளம் பிரதான சாலையின் குறுக்கே விடுபட்ட இடத்தில், கால்வாய் கட்டுமானப் பணி துவக்கப்பட்டு பணி தீவிரமாக நடந்து வருகிறது.