/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தலைமைக்கு கட்டுப்பட்டு புறக்கணித்தோம் தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்கள் கருத்து
/
தலைமைக்கு கட்டுப்பட்டு புறக்கணித்தோம் தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்கள் கருத்து
தலைமைக்கு கட்டுப்பட்டு புறக்கணித்தோம் தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்கள் கருத்து
தலைமைக்கு கட்டுப்பட்டு புறக்கணித்தோம் தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்கள் கருத்து
ADDED : ஜூலை 31, 2024 11:05 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி தி.மு.க., மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, தி.மு.க.,- - அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சியைச் சேர்ந்த, 35 பேர் போர்க்கொடி துாக்கினர்.
மேயர் மகாலட்சுமி மற்றும் அவரது கணவர் யுவராஜ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, நம்பிக்கையில்லா தீர்மானம் கேட்டு, 33 கவுன்சிலர்கள், கமிஷனர் செந்தில்முருகனிடம் மனு அளித்தனர். எனவே, ஜூலை 29ல், மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் மற்றும் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தி.மு.க.,- - அ.தி.மு.க., கவுன்சிலர்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதியில் தங்கி சுற்றுலா சென்றனர். ஏற்கனவே, அமைச்சர் நேரு, மாவட்ட செயலர் சுந்தர், கட்சியின் அமைப்பு செயலர் அன்பகம் கலை ஆகியோர், அதிருப்தி கவுன்சிலர்களிடம் பேச்சு நடத்தி, சமாதானம் செய்திருந்தனர்.
இதனால், நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்திற்கு, கவுன்சிலர்கள் பங்கேற்று, மேயருக்கு எதிராக ஓட்டளிப்பார்களா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிருப்தி கவுன்சிலர்கள் யாருமே, கூட்டத்திற்கு வராமல், 'ஆப்சென்ட்' ஆகினர். இதனால், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியைடைந்தது. மேயராக மகாலட்சுமி தொடர்கிறார்.
நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்திற்கு, ஒரு கவுன்சிலர்கள் கூட வராததது, காஞ்சிபுரம் நகரவாசிகள் மத்தியில், கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, திமுகவின், 17 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் ஒருவர் கூட வராததால், கவுன்சிலர்கள் கமிஷன் பெற்றுக்கொண்டு, கூட்டத்திற்கு வராமல் 'ஆப்சென்ட்' ஆகிவிட்டதாகவும், லட்சக்கணக்கில் பண பரிமாற்றம் நடந்திருப்பதாக, கவுன்சிலர்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆனால், 'கட்சி தலைமையின் பேச்சுக்கு கட்டுப்பட்டு தான், தி.மு.க., கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்திற்கு வரவில்லை' என, கவுன்சிலர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
கட்சி தலைமையும், மாவட்ட செயலர் சுந்தர் கூறியதாலேயே, நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்திற்கு நாங்கள் வரவில்லை. மேயர் மீதான குற்றச்சாட்டுகளை தலைமை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் என, மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். நாங்கள் யாரிடமும் பணம் பெறவில்லை. தலைமைக்கு கட்டுப்பட்டு கூட்டத்தை புறக்கணித்தோம்.
- வ.கமலக்கண்ணன்,
28-வது வார்டு,
தி.மு.க.,கவுன்சிலர்,
காஞ்சிபுரம் மாநகராட்சி
கட்சியின் தலைமை கூறியதை கேட்டு நாங்கள் கூட்டத்தை புறக்கணித்தோம். மாவட்ட செயலர் சுந்தர் கூறியதை கேட்டு நாங்கள் ஒட்டுமொத்த கூட்டத்திற்கு வரவில்லை. பணம் பெற்றுக் கொண்டு கூட்டத்திற்கு வராமல் போனதாக சொல்கிறார்கள். அவ்வாறு நாங்கள் யாரிடமும் பணம் பெறவில்லை.
- ரா.கார்த்திக்,
48 - வார்டு,
தி.மு.க., கவுன்சிலர்,
காஞ்சிபுரம் மாநகராட்சி