/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
2026ல் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு படுதோல்வி: பா.ஜ., சாடல்
/
2026ல் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு படுதோல்வி: பா.ஜ., சாடல்
2026ல் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு படுதோல்வி: பா.ஜ., சாடல்
2026ல் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு படுதோல்வி: பா.ஜ., சாடல்
ADDED : ஜூலை 18, 2024 10:34 AM

சென்னை: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு படுதோல்வியை மக்கள் பதிலாக வழங்குவர் என தமிழக பா.ஜ., தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் பிரதீப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. கொலை, கொள்ளை, சர்வ சாதாரணமாக நடக்கிறது. கள்ளச்சாராயம் சாவுகள் தொடர்கிறது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் திமுக ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்களை கொலை செய்யும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உயிரோடு எரித்த நிலையில் குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. சேலத்தில் அதிமுக நிர்வாகி சண்முகம் கொலை வழக்கில் திமுக நிர்வாகி சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் பா.ஜ., நிர்வாகி சக்திவேல் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூரில் பாமக நிர்வாகி அரிவாளால் வெட்டப்பட்டார். மதுரையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுதான் திராவிடர் மாடல் ஆட்சியா அல்லது கொலை மாடல் ஆட்சியா மக்கள் கேள்வி கேட்கின்றனர். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு படுதோல்வியை மக்கள் பதிலாக வழங்குவர் என்பது நிதர்சனமான உண்மை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.