/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாவட்ட அளவிலான கிரிக்கெட் பட்டாபிராம் அணி கலக்கல் வெற்றி
/
மாவட்ட அளவிலான கிரிக்கெட் பட்டாபிராம் அணி கலக்கல் வெற்றி
மாவட்ட அளவிலான கிரிக்கெட் பட்டாபிராம் அணி கலக்கல் வெற்றி
மாவட்ட அளவிலான கிரிக்கெட் பட்டாபிராம் அணி கலக்கல் வெற்றி
ADDED : மே 09, 2024 12:23 AM

சென்னை:திருவள்ளூர் மாவட்ட லீக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில், யுனிவர்சல் அணிக்கு எதிரான ஆட்டத்தில், பட்டாபிராம் அணி கலக்கல் வெற்றியை பதிவு செய்தது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன், திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட லீக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இவற்றில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லுாரிகள், நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கிரிக்கெட் அணிகள் பங்கேற்று, பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
போட்டிகள், 50 மற்றும் 30 ஓவர் அடிப்படையில் நடக்கின்றன.
இவற்றில், செங்குன்றம் தனியார் கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில், 'டிவிஷன் 2'ல் இடம் பிடித்துள்ள யுனிவர்சல் அணியும், பட்டாபிராம் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் களமிறங்கிய யுனிவர்சல் அணி, நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில், 8 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய பட்டாபிராம் அணி வீரர்கள், எவ்வித பதற்றமும் இன்றி பந்துகளை எதிர்கொண்டு, ரன்களை குவித்தனர். வினித் குமார், அய்யப்பன், ராமாராவ் முறையே 42, 32, 25 ரன்கள் விளாச, அந்த அணி 24 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து, 180 ரன்கள் குவித்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பட்டாபிராம் அணியின் இடதுகை பந்துவீச்சாளர் கார்த்திகேயன், சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவர் 36 ரன்கள் விட்டுக் கொடுத்து, 5 விக்கெட்டுகளை சாய்த்தார். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.