ADDED : ஜூலை 25, 2024 10:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் தி.மு.க., அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, தே.மு.தி.க., சார்பில் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலர் நல்லதம்பி, காஞ்சிபுரம் மாவட்ட செயலர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து தி.மு.க., அரசுக்கு எதிராகவும், தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் இட்டனர்.