/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்டாலின் பிறந்த நாள் விழா தி.மு.க.,வினர் உறுதிமொழி
/
ஸ்டாலின் பிறந்த நாள் விழா தி.மு.க.,வினர் உறுதிமொழி
ஸ்டாலின் பிறந்த நாள் விழா தி.மு.க.,வினர் உறுதிமொழி
ஸ்டாலின் பிறந்த நாள் விழா தி.மு.க.,வினர் உறுதிமொழி
ADDED : மார் 02, 2025 12:27 AM

குன்றத்துார், குன்றத்துார் ஒன்றியம்,படப்பை ஊராட்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின்பிறந்த நாள் விழா, குன்றத்துார் தெற்கு ஒன்றிய செயலரும், காஞ்சிபுரம் மாவட்ட குழு தலைவருமான படப்பை ஆ.மனோகரன் தலைமையில் நேற்று நடந்தது.
குன்றத்துார் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் வரவேற்றார். விழாவில், சிறப்பு விருந்தினராக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, படப்பை ஊராட்சியின் அனைத்து கிளைகளிலும்கழக கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
அப்போது, 'தமிழகம் போராடும்', 'தமிழகம் வெல்லும்' என்ற தலைப்பில், தி.மு.க.,வினர்உறுதிமொழி எடுத்தனர்.
இதை தொடர்ந்து, படப்பை பேருந்துநிலையம் அருகே, 2,000 பேருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப் பட்டது.