/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செங்கையில் சுவர் விளம்பரம் தி.மு.க., பணம் வினியோகம்
/
செங்கையில் சுவர் விளம்பரம் தி.மு.க., பணம் வினியோகம்
செங்கையில் சுவர் விளம்பரம் தி.மு.க., பணம் வினியோகம்
செங்கையில் சுவர் விளம்பரம் தி.மு.க., பணம் வினியோகம்
ADDED : மார் 29, 2024 08:30 PM
செங்கல்பட்டு:லோக்சபா தேர்தலில், தி.மு.க., சின்னங்கள் வரைவதற்கு, கிளை செயலர்களுக்கு, தலா 2,000 ரூபாய் வினியோகம் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் லோக்சபா தனித்தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் செல்வம் போட்டியிடுகிறார்.
இதனால், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க.. சார்பில், ஒரு கிளை செயலருக்கு, தலா 2,000 ரூபாய் வீதம், அனைத்து கிளை செயலர்களுக்கும், தி.மு.க., நிர்வாகிகள் நேற்று முன்தினம் பணம் வினியோகம் செய்தனர். இந்த பணத்தில், சுவர்களில் சுண்ணாம்பு அடித்து, இடம் பிடித்து, சின்னம் வரைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ஒரு கிளைக்கு 5,000 ரூபாயை நிர்வாகிகள் வினியோகம் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். சுவர் விளம்பரத்திற்கு குறைவாகவே பணம் கொடுத்துள்ளதாக, கிளை செயலர்கள் புலம்பி வருகின்றனர்.

