/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓட்டளிக்க முடியாமல் திரும்பிய டாக்டர்கள்
/
ஓட்டளிக்க முடியாமல் திரும்பிய டாக்டர்கள்
ADDED : ஏப் 19, 2024 10:43 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் ஓட்டளிக்க சென்றனர்.
அப்போது, அவர்களின் குடும்பத்தினர் ஓட்டளித்தனர். ஆனால், வாக்காளர் அட்டையிருந்தும், வாக்களர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, ஓட்டுப்பதிவு அலுவலர்கள் தெரிவித்ததால், டாக்டர்கள் ஓட்டளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில், 1,000த்துக்கும் மேற்பட்டோர் வாக்காளர்கள் அடையாள அட்டை இருந்தும், ஓட்டளிக்க முடியாமல் திரும்பி சென்றனர்.
இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு, இணையதளம் வழியாக புகார் செய்தனர்.
செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரி நகராட்சி தொடக்கப்பள்ளி ஓட்டுச்சாவடியில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ், நேற்று ஓட்டு செலுத்தினார்.
செங்கல்பட்டு அடுத்த மலையடிவேண்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஓட்டுச்சாவடியில், எஸ்.பி., சாய் பிரணீத் ஓட்டு செலுத்தினார்.

