/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி விஜயேந்திரரிடம் ரூ.2 லட்சம் நன்கொடை
/
காஞ்சி விஜயேந்திரரிடம் ரூ.2 லட்சம் நன்கொடை
ADDED : ஏப் 02, 2024 02:02 AM

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள கொல்லாசத்திரத்தில் ஸீதாராம பஜனை மண்டலி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் ஆண்டுதோறும், காஞ்சிபுரத்தில் ஸீதா கல்யாண மஹோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 32வது ஆண்டாக ஸீதா கல்யாண மஹோற்சவம் வரும் மே மாதம் 2ல் துவங்கி 5வரை, நான்கு நாட்களுக்கு நடக்கிறது. இந்த மஹோற்சவத்தின் அழைப்பிதழை காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் நேற்று வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து, உதய அஸ்தமன பூஜைக்கான, நன்கொடையாக 2 லட்சம் ரூபாய்கான காசோலையையும் ஸீதாராம பஜனை மண்டலி குழு தலைவர் முரளி பாகவதர், செயலர் ராதா கிருஷ்ணன், பொருளாளர் சிவராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் உடன் இருந்தார்.

