/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சான்றுகள் பெற பணம் தந்து ஏமாறாதீர்கள் புகார் தர மொபைல்போன் எண் அறிவிப்பு

ADDED : செப் 14, 2024 07:44 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், பொதுமக்கள் கவனத்திற்கு என தலைப்பிட்டு பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக முதல்வரால் கொண்டு வரப்பட்ட 15 விதமான, 'ஆன்லைன்' சான்றிதழ்கள் இணையதளம் வாயிலாக வழங்கப்படுகிறது. புதிய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, இலவச வீட்டு மனை பட்டா போன்ற சான்றுகள் இலவசமாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இச்சான்றுகள் பெற பொது மக்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இதுபோன்று சேவைகளுக்கு யாரேனும் பணம் கேட்கும் பட்சத்தில் வாலாஜாபாத் வட்டாட்சியர் அவர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், வாலாஜாபாத் வட்டாட்சியரை 93840 94643 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த பதாகை வைக்கப்பட்டு உள்ளதாக வாலாஜாபாத் வட்டாட்சியர் கருணாகரன் கூறியுள்ளார்.