/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிராம நிர்வாக உதவியாளர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு
/
கிராம நிர்வாக உதவியாளர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு
கிராம நிர்வாக உதவியாளர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு
கிராம நிர்வாக உதவியாளர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு
ADDED : மே 22, 2024 06:32 AM
ஆயிரம் விளக்கு : செங்கல்பட்டு, மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்,27; தலையாரி எனப்படும் கிராம நிர்வாக உதவியாளர்.
இவருக்கும், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், பெரியோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
அப்போது அஜித்குமார், தன்னை தாசில்தார் எனக் கூறி, வரதட்சணையாக 25 சவரன் நகை கேட்டுள்ளார்.
பெண் வீட்டில், 22 சவரன் நகை போட்டுள்ளனர். ஆனால், மீதமுள்ள 3 சவரன் நகையைக் கேட்டு அஜித்குமார், தன் மனைவியை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
இதன் பிறகு தான், அஜித்குமார் கிராம நிர்வாக உதவியாளர் எனத் தெரிந்தது. இதனால் அவரது மனைவி, தன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போதும், அஜித்குமார் நகை கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அவரது மனைவி புகார் அளித்தார்.
அதில், தாசில்தார் எனக் கூறி தன்னை ஏமாற்றி, திருமணம் செய்துவிட்டு கூடுதல் நகை கேட்டு, சித்ரவதை செய்வதாக குறிப்பிட்டு இருந்தார்.
போலீசார் விசாரித்ததில், அஜித்குமார் நகை கேட்டு, தன் மனைவியை சித்ரவதை செய்தது தெரிந்தது. நேற்று அவர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.

