/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தனியார் பஸ் - வேன் மோதல் டிரைவர் பலி; 13 பேர் படுகாயம்
/
தனியார் பஸ் - வேன் மோதல் டிரைவர் பலி; 13 பேர் படுகாயம்
தனியார் பஸ் - வேன் மோதல் டிரைவர் பலி; 13 பேர் படுகாயம்
தனியார் பஸ் - வேன் மோதல் டிரைவர் பலி; 13 பேர் படுகாயம்
ADDED : ஆக 24, 2024 09:33 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து, வெம்பாக்கம் வழியாக செய்யாறுக்கு தனியார் பேருந்து சென்றது. அதேபோல, செய்யார் பகுதியில் இருந்து, தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, மகேந்திரா டூரிஸ்ட் வேன் சென்றது.
நேற்று, மதியம் 1:30 மணி அளவில், திருப்பணாமூர் அருகே, தனியார் பேருந்து மீது, வேன் மோதியது. இதில், வேன் டிரைவர் இறந்தார். இதில், தனியார் பேருந்து மற்றும் வேனில் பயணம் செய்தவர்களில் 13 பேர் காயமடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், சுமங்கலி கிராமத்தைச் சேர்ந்த கோட்டீஸ்வரி, 32, உஷா, 39, சர்மிளா, 16, குணவன், 71, வனிதா, 53, கண்ணன், 70, சந்தியா, 25, ஜீவராணி, 35, தேவி, 58, டில்லிராணி, 30, ஈஸ்வரி, 36, ஐஸ்வரியா, 20, சிலம்பரசி, 22, ஆகிய 13 பேர், அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து, பிரம்மதேசம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.