ADDED : மார் 01, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை மற்றும்எல் அண்டு டிநிறுவனம் சார்பில், போதை மருந்துமற்றும் மதுப்பழக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சங்க தலைவர் டாக்டர்ரவி ஆலோசனையின்படி செல்வழிமங்கலத்தில் நேற்று நடந்தது.
மனநலத்துறை பேராசிரியர் டாக்டர் அர்த்தநாரி, மதுமற்றும் போதை மருந்துகளால்ஏற்படும் உடல்நலம், மனநலம் மற்றும் சமுதாய பாதிப்புகள் குறித்து தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், போதை பழக்கத்திலிருந்துஎப்படி மீள்வது என்பது குறித்தும் விளக்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மனிதவளத்துறை தலைவர் ஏகாம்பரம் மற்றும் பாதுகாப்பு துறை தலைவர் தமிழரசு ஆகியோர் செய்து இருந்தனர்.