/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரத்து குறைவால் பலா விலை உயர்வு முழு பழம் கிலோ ரூ.50க்கு விற்பனை
/
வரத்து குறைவால் பலா விலை உயர்வு முழு பழம் கிலோ ரூ.50க்கு விற்பனை
வரத்து குறைவால் பலா விலை உயர்வு முழு பழம் கிலோ ரூ.50க்கு விற்பனை
வரத்து குறைவால் பலா விலை உயர்வு முழு பழம் கிலோ ரூ.50க்கு விற்பனை
ADDED : மே 26, 2024 12:40 AM

காஞ்சிபுரம்:கடலுார் மாவட்டம், பண்ருட்டி சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் பலாப்பழம் காஞ்சிபுரத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. நடப்பு ஆண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு, பழம் வரத்து குறைந்துள்ளதால், காஞ்சிபுரம் வீதிகளில், முழு பலாப்பழம் கிலோ 50 ரூபாய்க்கும், சில்லறை விலையில், உரித்த பழம் கிலோ 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியைமச் சேர்ந்த பலாப்பழ வியாபாரி ஆர்.மீரா கூறியதாவது:
கடந்த ஆண்டு முழு பலாப்பழம் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லறை விலையில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்தேன்.
நடப்பு ஆண்டு விளைச்சல் குறைந்துள்ளதால், காஞ்சிபுரத்திற்கு பலாப்பழம் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், முழு பழம் கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
நாங்கள் முழு பழத்தை வாங்கி வந்து, அதை உரித்து சில்லறை வியைில், சுளையாக கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.
விலை அதிகமாக இருந்தாலும், பலாப்பழத்தில், வைட்டமின், கனிமச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டீன் என, பல்வேறு சத்துககள் உள்ளன. வாடிக்கையாளர்கள் இப்பழத்தை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.