/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெயிலால் விற்பனை அமோகம் தர்பூசணி விலை அதிகரிப்பு
/
வெயிலால் விற்பனை அமோகம் தர்பூசணி விலை அதிகரிப்பு
ADDED : மே 03, 2024 12:57 AM

சென்னை:வெயில் கொளுத்துவதால், குளிர்ச்சியான மற்றும் நீர்ச்சத்துள்ள தர்பூசணி, கிர்ணி, முலாம்பழம், வெள்ளரி உள்ளிட்டவற்றை, அதிகளவில் பலரும் வாங்கி சுவைக்கின்றனர்.
இவை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், ஏற்கனவே, ஒரு அறுவடை முடிந்த நிலையில், மறு அறுவடைக்கு, தர்பூசணி, கிர்ணி, முலாம் பழங்கள் தயாராகி வருகின்றன.
அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய இப்பழங்கள், உள்ளூர் தேவைக்கு பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும் அதிகளவில் எடுத்து செல்லப்படுகிறது.
ஜூஸ் தயாரிப்பதற்காக கடைகள் முதல் நட்சத்திர ஹோட்டல்கள் வரை இப்பழங்கள் கொள்முதல் அதிகரித்துள்ளது.
தேவை அதிகரித்துள்ள நிலையில், வரத்து குறைந்ததால், சென்னை கோயம்பேடு சந்தையில், மொத்த விலையில் 1 கிலோ தர்பூசணி 15 ரூபாயில் இருந்து 20 ரூபாய்க்கும், கிர்ணி 20 ரூபாயில் இருந்து 25 ரூபாய்க்கும், முலாம்பழம் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.