/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குளம் வெட்டும் பணி அரைகுறையால் மழை காலத்தில் நீர் சேகரிப்பதில் சிக்கல்

ADDED : செப் 01, 2024 01:43 AM

ஊவேரி:காஞ்சிபுரம் அடுத்த, ஊவேரி ஊராட்சியில்,புத்தேரி துணை கிராமம் உள்ளது. இங்கு, புதிய நீராதாரம் உருவாக்கும் விதமாக புதிய குளம் வெட்டும் பணிக்கு, அரசு ஒப்புதல் அளித்தது.
இங்கு, தனியார் தொழிற்சாலை நிதி பங்களிப்பு திட்டத்தின் கீழ், 1.23 ஏக்கர் பரப்பளவில், 2022ம் ஆண்டு புதிய குளம் வெட்டும் பணி துவக்கப்பட்டு உள்ளது.
இரண்டு ஆண்டுகளாகியும், குளத்தை முழுமையாக துார்வாரி மண் அணைக்கவில்லை. மேலும், பள்ளம்வெட்டும் பணி அரைகுறையாக விடப்பட்டுள்ளது என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், பருவ மழைக்காலத்தில் குளத்தில்தண்ணீரை தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், பருவ மழை துவங்குவதற்கு முன்பு குளத்தை துார்வார வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஊவேரி ஊராட்சி நிர்வாகம் கூறியதாவது:
குளம் வெட்டும் பணிக்கு மண்ணை அகற்றினால், மண் எடுத்து விற்பனை செய்வதாக புகார் தெரிவித்ததால், குளம் வெட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இருப்பினும், பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.