ADDED : மே 22, 2024 06:33 AM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம் : ராணிப்பேட்டை மாவட்டம், சகாயத்தோட்டம் கிராமத்தில் இயங்கும் டான்பாஸ்கோ வேளாண் கல்லுாரி மாணவர்கள், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் தங்கி, பல்வேறு வித செயல் விளக்க பயிற்சி பெற்று வருகின்றனர்.
நேற்று, ஆரியபெரும்பாக்கம் கிராமத்தில், நெல், வேர்க்கடலை சாகுபடி செய்யும் காலம் குறித்து, செயல் விளக்கம் அளித்தனர். இதில், டான்பாஸ்கோ வேளாண் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
