/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திரவுபதியம்மன் கோவிலில் 2ல் துரியோதனன் படுகளம்
/
திரவுபதியம்மன் கோவிலில் 2ல் துரியோதனன் படுகளம்
ADDED : ஜூன் 28, 2024 10:41 PM
காஞ்சிபுரம்:உத்திரமேரூர் காவல் நிலையம் அருகில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், மஹாபாரதம் மற்றும் தீமிதி பிரம்மோற்சவம், கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதில், தினமும் மதியம் 1:00 மணி முதல் 5:00 மணி வரை கம்மாளம்பூண்டி மதுரா, ஆள்வராம்பூண்டி ராமசாமி பாகவதர் மகாபாரத சொற்பொழிவு ஆற்றுகின்றனர். மேல்நந்தியம்பாடி குமார் கவி வாசிக்கிறார்.
ஜூன் 19ம் தேதியில் இருந்து, தினமும் இரவு 10:00 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம், நெடும்பிறை கிராமம் பொன்னியம்மன் கட்டைக்கூத்து கலைமன்றத்தினரின் மகாபாரத நாடகம் நடைபெறுகிறது.
ஜூலை 2ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதித் திருவிழாவும், 3ம் தேதி தருமர் பட்டாபிஷேகத்துடன், மஹாபாரதம் மற்றும் தீமிதி பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.