/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேகவதி ஆற்றில் விடப்படும் கழிவுநீர்
/
வேகவதி ஆற்றில் விடப்படும் கழிவுநீர்
ADDED : செப் 04, 2024 01:17 AM

காஞ்சிபுரம்:பாலாற்றின் கிளை ஆறான வேகவதி, காஞ்சி புரம் நகரை ஒட்டி, 13 கி.மீ., துாரம் பாய்ந்து தாங்கி கிராமம் அருகே பாலாற்றில் மீண்டும் கலக்கிறது.
கிராமங்களில் பெரிய அளவிலான ஆக்கிரமிப்பு இல்லாத வேகவதி ஆற்றில், காஞ்சிபுரம் நகரில், 1,400க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
இதுஒருபுறம் இருக்க, நகரை ஒட்டியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வேகவதி ஆற்றில் திறந்து விட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலகம் சுற்றுவட்டார பகுதிகள், ஓரிக்கை, டெம்பிள் சிட்டி, தும்பவனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து நேரடியாக குழாய் பதித்து கழிவுநீர் நேரடியாக வேகவதி ஆற்றில் திறந்து விடுகின்றனர்.
வேகவதி ஆற்றை பராமரிக்க வேண்டிய நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை இல்லை என, நகரவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நாகலுாத்துமேடு, டெம்பிள் சிட்டி அருகில் ஏராளமான வீடுகளில் இருந்து கழிவுநீர் வேகவதிஆற்றில் விடுகின்றனர். அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க நகரவாசிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.