/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேவல் சண்டை சூதாட்டம் எட்டு பேர் கைது
/
சேவல் சண்டை சூதாட்டம் எட்டு பேர் கைது
ADDED : ஜூலை 22, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார் : அனுமதியின்றி சேவல் சண்டை போட்டியில் ஈடுபட்ட எட்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
குன்றத்துார் அருகே பரணிபுத்துார் பகுதியில் உரிய அனுமதியின்றி பணம் வைத்து சேவல் சண்டை போட்டி நடப்பதாக, மாங்காடு போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட யுவராஜ், 20, வேலாயுதம், 21, உதயா, 25, உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து, சொந்த ஜாமினில் விடுவித்தனர். மேலும், இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சண்டை சேவல்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.