/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறப்பு கிராம சபை கூட்டம் ஏகனாபுரத்தினர் புறக்கணிப்பு
/
சிறப்பு கிராம சபை கூட்டம் ஏகனாபுரத்தினர் புறக்கணிப்பு
சிறப்பு கிராம சபை கூட்டம் ஏகனாபுரத்தினர் புறக்கணிப்பு
சிறப்பு கிராம சபை கூட்டம் ஏகனாபுரத்தினர் புறக்கணிப்பு
ADDED : ஜூன் 30, 2024 11:33 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், நேற்று காலை, சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், தொகுப்பு வீடுகள் மறுசீரமைப்பு, கலைஞரின் கனவு இல்லம் பயனாளிகள் தேர்வு செய்தல், புதிய வீடு கட்ட விடுபட்டோர் மனு அளிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டு இருந்தன.
சிறப்பு கிராம சபை கூட்டத்திற்குரிய ஏற்பாடுகளை அந்தந்த ஊராட்சி நிர்வாகம் செய்தனர்.
நேற்று காலை, மதுரமங்கலம் அடுத்த, ஏகனாபுரம் கிராமத்தில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இதை, அப்பகுதி மக்கள் முற்றிலும் புறக்கணித்தனர்.
நாளை மறுதினம் முதல், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் முன், தொடர் உண்ணாவிரதம் போராட்டம் துவங்கும் என, போராட்ட குழுவினர் அறிவித்தனர்.
l வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூரில் ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.
இதில், பற்றாளராக வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர் பார்வதி பங்கேற்றார். கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடு கட்ட 37 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஊராட்சி செயலர் ஜெகஜீவன்ராம் நன்றி கூறினார்
l காஞ்சிபுரம் ஒன்றியம் காலுார் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு சகுந்தலா தலைமை வகித்தார். காஞ்சிபுரம் பி.டி.ஓ., சகுந்தலா முன்னிலை வகித்தார்.
வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் பற்றாளராக பங்கேற்றார். இதில், 3 பயனாளிகள், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்
l காஞ்சிபுரம் அடுத்த, காரை ஊராட்சியில் நேற்று நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் வள்ளியம்மாள் தலைமை வகித்தார். சிறப்பு கிராம சபை கூட்டத்தின் தீர்மானங்களை ஊராட்சி செயலர் குமார் வாசித்தார். வீடு கட்டுவதற்கு 2 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், 26 வீடுகள் கேட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதேபோல, புதுப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், வேளியூர், சிறுவாக்கம், பரந்துார் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் பயனாளிகள் தேர்வு செய்ததை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன
l உத்திரமேரூர் ஒன்றியம், குண்ணவாக்கம் ஊராட்சியில், ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ், வீடுகள் கட்ட 16 பயனாளிகளும், பழுதடைந்த பழைய வீடுகள் சீரமைக்கும் திட்டத்திற்கு 20 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்
l காட்டாங்குளம் ஊராட்சியில் அப்பகுதி ஊராட்சி தலைவர் செல்வகுமரன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கலைஞர் கனவு இல்ல திட்ட வீடுகள் கட்ட 16 பயனாளிகளும், பழைய வீடுகள் சீரமைக்க 2 பயனாளிகள் தேர்வாகினர்.
இதேபோன்று, உத்திரமேரூர் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நடந்த கூட்டங்களில், கனவு இல்ல திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.