/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் பிரச்னைக்குரிய நபர்களுக்கு எச்சரிக்கை
/
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் பிரச்னைக்குரிய நபர்களுக்கு எச்சரிக்கை
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் பிரச்னைக்குரிய நபர்களுக்கு எச்சரிக்கை
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் பிரச்னைக்குரிய நபர்களுக்கு எச்சரிக்கை
ADDED : மார் 30, 2024 09:14 PM
திருப்போரூர்:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்., 19ம் தேதி நடைபெறும் என, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் அடங்கிய திருப்போரூர் சட்டசபை தொகுதியில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக, கட்சி விளம்பரங்கள் அழிப்பு, வாகன சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல், பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு, கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலின் போது மோதல் நடந்த இடங்களில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஓட்டுச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லுதல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஓட்டுப்பதிவு முடிந்ததும், அந்த எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு வருதல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டிய இடங்கள் ஆகியவை குறித்தும், தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பிரச்னைக்குரிய நபர்கள் யார், யார் என கண்டறியப்பட்ட பட்டியல், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., அலுவலகம் வாயிலாக, திருப்போரூர் சட்டசபை தொகுதியில் அடங்கிய காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
போலீசார், அந்த நபர்களை தொடர்பு கொண்டு, தேர்தலின் போது எந்தவித பிரச்னையும் செய்யக்கூடாது எனவும், அவ்வாறு பிரச்னையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து வருகின்றனர்.

