/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீட்டில் மின் பெட்டி வெடிப்பு 2 சொகுசு கார்கள் தீக்கிரை
/
வீட்டில் மின் பெட்டி வெடிப்பு 2 சொகுசு கார்கள் தீக்கிரை
வீட்டில் மின் பெட்டி வெடிப்பு 2 சொகுசு கார்கள் தீக்கிரை
வீட்டில் மின் பெட்டி வெடிப்பு 2 சொகுசு கார்கள் தீக்கிரை
ADDED : ஆக 12, 2024 03:24 AM
நீலாங்கரை : இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன், 52; டாக்டர். கோடம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரிடம், 'பென்ஸ், டொயோட்டா வெல்பயர்' ஆகிய சொகுசு கார்கள் உள்ளன.
சில தினங்களாக, சீரான மின் வினியோகம் வராததால், வீட்டில் மின் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. நேற்று அதிகாலை, மீட்டர் பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு, திடீரென வெடித்து தீ பிடித்தது.
மின் பெட்டி இருந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு கார்களில் தீப்பொறி விழுந்து, இரு கார்களும் தீப்பிடித்தன.
திருவான்மியூர் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். மின் பெட்டி வெடித்ததால், கார்கள் தீ பிடித்தனவா அல்லது வேறு காரணமா என, நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.