/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்சார ரயில் ரத்து தாம்பரத்தில் நெரிசல்
/
மின்சார ரயில் ரத்து தாம்பரத்தில் நெரிசல்
ADDED : மார் 10, 2025 02:14 AM

சென்னை,
கடற்கரை -- எழும்பூர் இடையே, நான்காவது புதிய ரயில் பாதையின் இறுதிக்கட்ட பணி நேற்று நடந்தது. இதனால், கடற்கரை -- தாம்பரம், செங்கல்பட்டு தடத்தில் அதிகாலை 5:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை என, 11 மணி நேரம் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும், பயணியர் வசதிக்காக, தாம்பரம் -- கோடம்பாக்கம் இடையே, 30 நிமிடம் இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மின்சார ரயில் ரத்தால், தாம்பரம் ரயில் நிலையத்தில், சிறப்பு ரயிலை பிடிக்க பயணியர் கூட்டம் அலைமோதியது.
இதனால், அரசு பேருந்தை நோக்கி பயணியர் சென்றதால், தாம்பரம் பேருந்து நிலையத்திலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மாலை 4:10 மணிக்குப்பின், வழக்கமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டதால், கூட்ட நெரிசல் படிப்படியாக குறைந்தது.