/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பக்கவாட்டில் மண் அணைக்காமல் உயரமாக சிமென்ட் சாலை அமைப்பு
/
பக்கவாட்டில் மண் அணைக்காமல் உயரமாக சிமென்ட் சாலை அமைப்பு
பக்கவாட்டில் மண் அணைக்காமல் உயரமாக சிமென்ட் சாலை அமைப்பு
பக்கவாட்டில் மண் அணைக்காமல் உயரமாக சிமென்ட் சாலை அமைப்பு
ADDED : ஏப் 08, 2024 11:24 PM

கோனேரிகுப்பம் : காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, இந்திரா நகர், பவானியம்மன் கோவில் தெருவில், சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் உள்ள சாலை மற்றும் தெருக்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், 300 மீட்டர் நீளத்திற்கு புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
சாலை தரை மட்டத்தில் இருந்து முக்கால் அடி முதல், ஒரு உயரத்திற்கு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், சாலையின் இருபுறமும் மண் அணைக்கப்படாமல் உள்ளது.
இதனால், சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது உயரமான சாலையில் இருந்து, சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, உயரமாக உள்ள சாலையின் இருபுறமும் மண் அணைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்திஉள்ளனர்.

