/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இரட்டை கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்
/
இரட்டை கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 12, 2024 01:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், செவிலிமேடு, ஜெம்நகரில் இருந்து, அதியமான் நகர், எம்.ஜிஆர்., நகர், சதாசிவம் நகர், ஆசிரியர் நகர் வழியாக தேனம்பாக்கம் ஏரிக்கு மழைநீர் செல்லும் வகையில் இரட்டை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செவிலிமேடு சம்பந்தமூர்த்தி நகர் பூங்கா பின்பக்கமாக செல்லும் கால்வாயில் கோரை புற்கள் புதர்போல மண்டியுள்ளன.
இதனால், இப்பகுதியில் பலத்த மழை பெய்தால், இரட்டை கால்வாய் வழியாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, கால்வாயில் மண்டி கிடக்கும் கோரை புற்களை அகற்றி, கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.