/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
/
மழைநீர் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 29, 2024 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சி, பஞ்சுபேட்டை பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறுவதற்காக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், பஞ்சுபேட்டை ரேஷன் கடை எதிரில்சிறுபாலம் வழியாக செல்லும் கால்வாயில், செடி, கொடிகள் புதர்போல மண்டி, கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது.
இதனால், மழைக்காலத்தில் கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. எனவே, புதர்மண்டியுள்ள மழைநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.